‘நேர் கொண்ட பார்வை’ ஆகஸ்ட் 10ல் ஏன் ரிலீஸ் தெரியுமா?

அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ திரைப்படம் நீண்ட பொங்கல் விடுமுறையில் வெளிவந்ததால் மிகப்பெரிய ஓப்பனிங் வசூல் கிடைத்தது. அதுபோல் அவர் நடித்து வரும் ‘நேர் கொண்ட பார்வை’ திரைப்படமும் ஒரு நீண்ட விடுமுறை தினத்தில் தான் ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

‘நேர் கொண்ட பார்வை’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 12ஆம் தேதி பக்ரீத், ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினம் அதனையடுத்து சனி, ஞாயிறு என நீண்ட விடுமுறை தினம் வருவதால் இந்த படத்தின் ஓப்பனிங் மிகப்பெரியதாக இருக்கும் என கணிக்கப்படுகிறது

அஜித், வித்யாபாலன், ஷராதாஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜூன் சிதம்பரம், அபிராமி வெங்கடாச்சலம், ஆண்ட்ரியா தரங், அஸ்வின் ராவ், சுஜித் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை எச்.வினோத் இயக்கி வருகிறார். யுவன்ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கின்றார்.

 

Leave a Reply