shadow

நேபாளம் சென்ற இந்தியாவின் முதல் ரயில்: மக்கள் உற்சாக வரவேற்பு

இந்தியாவில் இருந்து நேபாளம் சென்ற முதல் ரயிலுக்கு அந்நாட்டு மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்பு அளித்தனர்.

இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள பத்னாஹா என்ற பகுதியில் இருந்து நேபாளம் நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள தொழில் நகரமான பிரட்நகர் என்ற பகுதியை இணைக்க 18.1 கிலோமீட்டர் தூரத்தில் புதிய ரெயில் பாதை போடப்பட்டது என்பது தெரிந்ததே. இந்த பாதையில் நேற்று முதல் வெள்ளோட்ட ரயில் சென்றது. இந்திய ரயில்வே அதிகாரிகள் சென்ற இந்த ரயிலை அந்நாட்டு மக்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.

சுமார் 448 கோடி ரூபாயில் அமைக்கப்பட்ட இந்த ரயில் பாதையில் 13.1 கிலோமீட்டர் பாதை நேபாளம் நாட்டு நிலப்பரப்பில் அமைந்துள்ளது.இந்த ரயில் பாதை அமைக்கும் மொத்த செலவையும் இந்தியாவே ஏற்றுக்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply