நெசவாளர்களுக்கு தமிழக முதல்வரின் புதிய அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள நெசவாளர்களுக்கு புதிய சலுகை அறிவிப்பு ஒன்றை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவித்துள்ளார். அதன் விபரம் பின்வருமாறு:

கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள கைத்தறி நெசவாளர்களை ஊக்குவிக்கவும், அவர்களது வருவாயை அதிகரித்து வாழ்க்கைத்தரத்தை உயர்த்தவும், நெசவாளர்கள் தற்போது பெற்று வரும் அகவிலைப்படியில் 10% உயர்த்தி வழங்கப்படும்

தொடக்க நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கப்பட்டு வரும் வட்டி மானியம் 4% லிருந்து 6% ஆக உயர்த்தப்படும்.

மேலும் பனை மரங்களை அதிக அளவில் வளர்ப்பதற்கு நடப்பாண்டில் ரூ.10 கோடி மதிப்பில் 2.5 கோடி பனை விதைகள் வேளாண்மை& தோட்டக்கலை துறை மூலம் பெற்று விவசாயிகளுக்கு வழங்கப்படும். நடப்பாண்டில் 100 விதை சேமிப்பு கிடங்குகளுடன் கூடிய துணை வேளாண்மை விரிவாக்க மையங்களை கட்டுவதற்கு ரூ.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

Leave a Reply