shadow

நீர்நிலைகளை ஆக்கிரமித்தவர்களுக்கு வெள்ள நிவாரணம் இல்லை: நீதிமன்றம் உத்தரவு

சென்னையில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை 8 வாரங்களில் அகற்ற வேண்டும் என்று சென்னை மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் நீர்நிலைகளை ஆக்கிரமிப்பது கடும் குற்றம் என்று நீதிபதி வேதனை தெரிவித்தார்.

அதேபோல் நீர்நிலைகளை ஆக்கிரமித்தவர்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்க கூடாது என்றும் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

மேலும் நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்வது கடுங்குற்றம். 3 வாரங்களில் ஆக்கிரமிப்பை அகற்றுவதுடன் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அகற்றாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்றுவது தான் அரசின் கடமை. ஆக்கிரமிப்பை அகற்றாதவர்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்கக்கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply