shadow

நீராடும் பொழுது நினைவில் கொள்ள வேண்டியது

7நீராடுவது என்பது ஒரு கலை. அருவியிலும், நதிகளிலும், குளங்களிலும், கிணற்றிலும், கடலிலும், குழாய் நீரிலும் நீராடுவது வழக்கம். தூய்மையாக நாம் குளித்தாலும் கூட அதற்கென்று சில வழிமுறைகள் இருக்கின்றன. நீராடும் பொழுது உடுத்திய ஆடையால் உடலைத் துடைக்கக் கூடாது.

அமாவாசை, பவுர்ணமி நாட்களில் கடலில் நீராடுவது நல்லது என்றாலும், ஞாயிறு மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் வரும் பவுர்ணமியில் கடலில் நீராடக் கூடாது. குளிக்கும் பொழுது நாராயணன் நாமத்தைச் சொல்ல வேண்டும். உணவு சாப்பிட்ட பின்பும், நள்ளிரவிலும் குளிப்பதைத் தவிர்க்க வேண்டும். கிரகண காலத்தில் இருமுறை நீராட வேண்டும். கிரகணம் பிடிக்கும் பொழுதும், கிரகணம் விலகிய பின்னும் நீராடுவது உகந்தது.

கடலிலும், ஆற்றிலும் குளிக்கும் பொழுது, மூன்று முறை மூழ்கி நீராடுவது நல்லது. மூழ்கி எழும் பொழுது இறைவன் பெயரை உச்சரிக்க வேண்டும். வீட்டில் குளிக்கும்போது, தண்ணீரை தலையில் ஊற்றிக் கொள்ளும் முன்பாக தெய்வப்பெயரை உச்சரிப்பது நன்மை தரும். இவ்வாறு நீராடினால் உடலும், மனமும் தூய்மையாகும்.

Leave a Reply