shadow

நீங்கள் செல்போன் அடிமையா? இந்த செயலியை பயன்படுத்துங்கள்

செல்போனில் மணிக்கணக்கில் நேரம் போவதே தெரியாமல் இருப்பவர்களுக்கு அதாவது செல்போனுக்கு அடிமையாக இருப்பவர்களுக்கு என ஒரு பிரத்யேக செயலி வந்துள்ளது. அதன் பெயர் யுவர் ஹவர். இந்த செயலி குறித்து தற்போது பார்ப்போம்

நமது ஸ்மார்ட்போனில் இந்த யுவர் ஹவர் செயலியை இன்ஸ்டால் செய்தததும், நாம் ஒரு நாளில் எத்தனை முறை ஸ்மார்ட்போனை அன்லாக் செய்திருக்கிறோம், எவ்வளவு நேரம் உபயோகித்து இருக்கிறோம் போன்ற தகவல்களை நமக்கு இந்த செயலி தெரியப்படுத்துகிறது. மேலும், ஒரு வாரத்திற்கு நாம் எவ்வளவு நேரம் போனில் நேரம் செலவிட்டு இருக்கிறோம் என்பதையும் கணக்கிட்டு காண்பிக்கிறது.

ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற மற்ற வலைத்தளங்களில் நாம் செலவிட்ட நேரத்தையும் துல்லியமாக சொல்லிவிடுகிறது. இத்துடன் அதற்கான வரைபடமும் போட்டு காண்பித்து விடும். இதை வைத்து நாம் போன் உபயோகிப்பதில் எந்த நிலையில் இருக்கிறோம் என்றும் அறிந்து கொள்ள முடியும்.

இந்த செயலி ஏங்குபவர், எப்போதாவது உபயோகிப்பவர், சார்ந்து இருப்பவர், போனை காதலிப்பவர், அதற்கு அடிமையானவர் என்ற ஐந்து வகைகளில் நாம் எந்த பிரிவில் இருக்கிறோம் என்பதை நமது பயன்பாட்டை வைத்து சொல்லிவிடும். ஏதாவது ஆப் பார்க்க ஆரம்பிக்கும் போது நாம் ஒரு டைமரும் வைத்துக் கொள்ளலாம். இதனால் அதிக நேரம் போனைப் பார்த்து காலத்தை விரயமாக்காமல் காப்பாற்றும்.

Leave a Reply