நடிகரும் இயக்குனரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் தன்னிடம் வளர்ந்து வரும் குழந்தைகள் அனைவரும் ஆசிரியர் ஆக வேண்டும் என்ற தனது ஆசையை தெரிவித்துள்ளார்

இன்று நாடு முழுவதும் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுவதை அடுத்து பல பிரபலங்கள் ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

அந்த வகையில் நடிகர் இயக்குனர் நடன இயக்குனர் ஆகிய ராகவா லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்

மேலும் என்னிடம் வளர்ந்த குழந்தைகள் பலர் தற்போது ஆசிரியராக இருப்பது தனக்கு மிகவும் பெருமையாக இருப்பதாகவும் மேலும் பலரும் எதிர்காலத்தில் ஆசிரியர் ஆக வேண்டும் என்று ஆசைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் என்றும் அவர் கூறியுள்ளார் ராகவா லாரன்ஸ் இந்த ட்விட்டர் பதிவு தற்போது வைரலாகி வருகிறது

Leave a Reply