shadow

நியூயார்க் உலக வர்த்தக மையம் அருகே தீவிரவாதி தாக்குதல்: 8 பேர் பலி, 11 பேர் காயம்

நியூயார்க்கில் உள்ள மான்ஹாட்டன் என்ற பகுதியில் பைக்குகள் செல்லும் பாதையில் திடீரென கனரக வாகனத்தை ஓட்டி வந்த தீவிரவாதி ஒருவன் பைக்குகளை மோதி ஏற்படுத்திய விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 11 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பைக்குகள் மீது வாகனத்தால் மோதிய தீவிரவாதி பின்னர் வாகனத்தில் இருந்து தப்பித்து ஓடும் வழியில் போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டான். மரணம் அடைவதற்கு முன்னர் அந்த தீவிரவாதி ‘அல்லாஹ் அக்பர், காட் இஸ் கிரேட்’ என்று கூறியதாக மான்ஹாட்டன் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து நியூயார்க் மேயர் கூறுகையில் இது ஒரு தீவிரவாதி தாக்குதல்தான் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. விசாரணை மேலும் நடந்து வருவதால் இதுகுறித்து மேலும் எந்த தகவலும் கூற முடியாது’ என்று கூறியுள்ளார். இருப்பினும் அந்த தீவிரவாதி ஐஎஸ் இயக்கத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

Leave a Reply