shadow

நிமிடங்களில் 2.5 லட்சம் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்த சியோமி

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமியின் ரெட்மி 4 ஸ்மார்ட்போனிற்கான முதல் பிளாஷ் விற்பனை இன்று மதியம் நடைபெற்றது. இதில் 10 நிமிடங்களிலேயே அந்நிறுவனம் 2.5 லட்சம் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளதாக சியோமி தெரிவித்துள்ளது.

சியோமி நிறுவனத்தின் ரெட்மி 4 ஸ்மார்ட்போனினை கடந்த மாதம் அறிமுகம் செய்தது. இந்தியாவில் ரூ.6,999 என்ற விலையில் துவங்கும் ரெட்மி 4 முதல் பிளாஷ் விற்பனை இன்று நடைபெற்றது. அமேசான் மற்றும் Mi தளங்களில் நடைபெற்ற விற்பனையில் சுமார் 2,50,000 ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி விற்பனை துவங்கியதும் 8 நிமிடங்களிலேயே 2.5 லட்சம் ரெட்மி 4 ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக சியோமி தெரிவித்துள்ளது. இந்தியாவில் முதல் நாளிலேயே 2,50,000 ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்திருப்பது முதல் முறை கிடையாது.

முன்னதாக ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போனினை முதல் பத்து நிமிடங்களில் 2.5 லட்சம் யுனிட்களை விற்பனை செய்திருந்தது. இதோடு விற்பனை துவங்கிய முதல் நான்கு நிமிடங்களில் சியோமி நிறுவனம் 2,50,000 ரெட்மி 4A ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளது.

இந்தியாவில் சியோமி நிறுவனத்தின் ரெட்மி ஸ்மார்ட்போன்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதன்படி 2016 ஆண்டின் முதல் காலாண்டில் முன்னிலை வகித்த சாம்சங் கேலக்ஸி ஜெ2 ஸ்மார்ட்போனினை பின்னுக்கு தள்ளி சியோமி ரெட்மி நோட் 4 முதலிடம் பிடித்துள்ளது.

Leave a Reply