shadow

நிஜ இந்தியன் தாத்தாவாக மாறிய கமல்ஹாசன்


கொடைக்கானல் பகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து நிவாரண உதவிகள் வழங்கிய கமல்ஹாசன், லஞ்சம் கேட்ட அதிகாரியை போனில் அழைத்து பேசிய விவகாரம் தற்போது வைரலாகி வருகிறது

கொடைக்கானலில் உள்ள ம‌லைய‌க்காடு பகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டித்தர ஊராட்சி அலுவலக உதவியாளர், வீடு ஒன்றுக்கு 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்பதாக கமலிடம் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். உடனடியாக அந்த அதிகாரி நம்பரை வாங்கி தனது செல்போனில் தொடர்புகொண்ட கமல் அவரிடம் பேசியதாவது:

“வணக்கங்க. நான் கமல்ஹாசன் பேசுகிறேன். இங்க வீடு கட்டும் திட்டத்துக்கு 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பில் உள்ளது. அதைக் கட்ட நீங்கள் கொடுப்பதற்கு அவங்க எதுவும் ரூ.50 ஆயிரம் முன் பணம் கொடுக்கவேண்டி உள்ளதா? (அதிகாரி அங்கிருந்து பதில் சொல்கிறார்) ஆங், அவ்வளவுதானே அவங்க எதுவும் பணம் கொடுக்க வேண்டியது இல்லையே, ( அதிகாரி பதில் சொல்கிறார்) இங்க யாரோ வந்து கேட்டிருக்காங்க. சரி. ஓக்கே. லஞ்சம் கேட்காமல் பார்த்துக்கங்க. இங்க நாங்களும் பார்த்துக்கிட்டிருக்கோம்.” என ஊடகங்கள் முன் அதிகாரியிடம் பேசினார்.

கமல் அதிகாரியிடம் பேசிய இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

 

Leave a Reply