நிக்கி கல்ராணி, ஆர்ஜே பாலாஜிக்கு முக்கியத்துவம்: ஹீரோ ஜீவா அப்செட்

நடிகர் ஜீவா ஹீரோவாக நடித்த ‘கீ’ திரைப்படம் பல மாதங்களுக்கு முன்னரே ரிலீசுக்கு தயாராகிய நிலையில் தற்போது இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 12ஆம் தேதி வெளிவரவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது

ஆனால் இந்த படத்தை விளம்பரம் செய்யும் தயாரிப்பு நிறுவனம் நிக்கி கல்ராணி மற்றும் ஆர்ஜே பாலாஜி ஆகிய இருவருக்கும் முக்கியத்துவம் தந்து புரமோஷன் செய்து வருகின்றனர். இவர்கள் இருவருடைய சமீபத்திய படங்கள் ஹிட்டானதே இதற்கு காரணம். இதனால் ஜீவா தரப்பு கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

காளீஸ் இயக்கியுள்ள இந்த படத்தில் ஜீவா, கோவிந்த் பத்மசூர்யா, நிக்கி கல்ராணி, அனைகா சோட்டி, ஆர்ஜே பாலாஜி உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.

Leave a Reply