shadow

நாய்க்கறி வதந்தி விவகாரம்: இறைச்சி வியாபாரிகள் சங்கம் கண்டனம்

கடந்த வாரம் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 1000 கிலோ நாய்க்கறி பறிமுதல் செய்ததாக கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களிலும் செய்தி வெளியானது.

ஆனால் இந்த இறைச்சியை சோதனை செய்தபோது இது நாய்க்கறி இல்லை, ஆட்டுக்கறி என்பது உறுதியானது. இதனையடுத்து கடந்த சில நாட்களாக பரவி வந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி ஏற்பட்டது. இருப்பினும் இந்த வதந்தியால் இறைச்சி வியாபாரமும், அசைவ உணவு வியாபாரமும் பாதிப்பு அடைந்தது.

இந்த நிலையில் ஆட்டுக்கறியை, நாய்கறி என்று வதந்தி பரப்பியதற்கு, இறைச்சி வியாபாரிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் காய்கறி கெட்டுப்போனால் உணவ உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்றும் ஆனால் இறைச்சி விவகாரத்தில் மட்டும் வேறு மாதிரி நடவடிக்கை இருப்பது சரியல்ல என்றும் இறைச்சி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

Leave a Reply