shadow

நான் தான் அதிபர்: சபாநாயகரின் திடீர் அறிவிப்பால் வெனிசுலாவில் பரபரப்பு

வெனிசுலா நாட்டின் அதிபராக அந்நாட்டின் சபாநாயகர் ஜூவான் கொய்டா முயற்சித்ததாக கூறப்பட்டதை அடுத்து அவர் சமிபத்தில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று எதிர்க்கட்சியினர் சார்பில் பிரமாண்ட பொதுக்கூட்டம் ஒன்று வெனிசுலாவில் நடந்தது. இதில், கலந்து கொண்ட ஜூவான் கொய்டா தன்னை தானே நாட்டின் அதிபராக அறிவித்துக் கொண்டார். இதற்கு அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முன்னாதாக வெனிசுலா அதிபர் தேர்தலில் நிக்கோலஸ் மதுரோ வெற்றி பெற்று மீண்டும் அதிபராக பதவியேற்றார். ஆனால் இந்த தேர்தலில் முறைகேடு நடந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply