shadow

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்: குடியரசுத் தலைவர் உரையின் முக்கிய அம்சம்:

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் சற்றுமுன் தொடங்கியது. இந்த கூட்டத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தொடங்கி உரை நிகழ்த்தி வருகிறார்.

நாடு முழுவதும் புதிதாக எய்ம்ஸ் மருத்துவமனைகள் துவங்கப்பட உள்ளதுதாகவும், ஏழை மக்களுக்கு வீடுகள் கட்டித்தரும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் குடியரசுத் தலைவர் தனது உரையில் தெரிவித்தார்.

மேலும் நாட்டு மக்கள் அனைவரும் சிறப்பாக வாழ வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என்றும், பிரதமர் காப்பீடு திட்டத்தின் கீழ் 21 கோடி பேர் பயன் பெற்றுள்ளதாகவும் தெரிவித்த குடியரசு தலைவர் அனைத்து கிராமங்களுக்கும் விரைவில் மின்சாரம் வசதி செய்யப்படும் என்றும், நான்கரை ஆண்டுகளில் 13 கோடி வீடுகளுக்கு எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், ஆயுஷ் மான் பாரத் திட்டத்தின் கீழ் 10 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளதாகவும் கூறினார்.

மேலும் ஏழைகளின் வளர்ச்சியை கருத்தில் கொண்டே அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும், அரசின் நலத்திட்டங்கள் இடையூறு இன்றி மக்களை சென்றடைகின்றன என்றும், ஊழலற்ற இந்தியாவை உருவாக்குவதே அரசின் நோக்கம் என்றும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது உரையில் கூறினார்.

Leave a Reply