shadow

நாடாளுமன்ற தேர்தலில் சமூக வலைத்தளங்களின் பங்கு: ரூ.12 ஆயிரம் கோடி வருமானமா?

நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறவிருக்கும் நிலையில் இந்த தேர்தலில் சமூக வலைத்தளங்களில் விளம்பரம் செய்ய அனைத்து அரசியல் கட்சிகளும் ஆர்வம் காட்டுவதால் சமூக வலைத்தளங்களுக்கு சுமார் ரூ.12 ஆயிரம் கோடி வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2014ஆம் தேர்தலிலேயே ஓரளவுக்கு சமூக வலைத்தளங்களை அரசியல் கட்சிகள் பயன்படுத்திய நிலையில் இந்த ஆண்டு தேர்தலில் சமூக வலைத்தளங்களின் பங்கு மிகப்பெரியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஓரளவு ஃபாலோயர்கள் வைத்திருக்கும் சமூக வலைத்தள பயனாளிகளுக்கும் ஜாக்பாட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.,

சமூக வலைதளங்களுக்கான, விளம்பரத் துறையைச் சேர்ந்த நிபுணர் ஒருவர் கூறியபோது, ‘எங்கள் கணிப்பின்படி, கடந்த தேர்தலைவிட, வரும் தேர்தலில், சமூக வலை தளங்கள் மூலமான விளம்பரம், 150 மடங்கு அதிகரிக்கும். அதாவது, 12 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, விளம்பரம் செய்யப்படும் என, எதிர்பார்க்கிறோம். இதில், பேஸ்புக்கில் மட்டும், 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புக்கு விளம்பரங்கள் செய்யப்படும் என, கணிக்கப்படுகிறது.

 

Leave a Reply