நாங்குனேரியில் யார் போட்டி? திருநாவுக்கரசர்

நாங்குனேரி தொகுதி எம்.எல்.ஏ வசந்தகுமார், கன்னியாகுமரி தொகுதியின் எம்பியாகிவிட்டதால் அவர் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து அந்த தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் வரவுள்ளது

இந்த நிலையில் நாங்குனேரி தொகுதியை திமுகவுக்கு காங்கிரஸ் விட்டுத்தர வேண்டும் என்று திமுக பிரமுகர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் காங்கிரஸ் தரப்பு இதற்கு மறுப்பு தெரிவித்து வருகின்றது

இந்த நிலையில் நாங்குநேரியில் காங்கிரஸ் போட்டியிடும் என நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர், அவரது கருத்தை சொன்னதில் எந்த தவறும் இல்லை என்று கூறிய திருநாவுக்கரசர், ‘நாங்குநேரியில் யார் போட்டி என்பது குறித்து காங். – திமுக தலைவர்கள் ஆலோசித்து இறுதி முடிவு எடுப்பார்கள் என்று தெரிவித்தார்

Leave a Reply