நயன்தாராவுடன் மீண்டும் இணையும் விஜய்சேதுபதி?


லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுடன் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி ஏற்கனவே ‘நானும் ரெளடிதான்’ மற்றும் ‘இமைக்கா நொடிகள்’ ஆகிய படங்களில் நடித்துள்ள நிலையில் இன்னொரு படத்திலும் அவருடன் இணைந்து நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளில் தயாராகவுள்ள இந்த படத்தில் விஜய்சேதுபதி, நயன்தாராவுடன் மம்முட்டியும் முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளார். இதில் நயன்தாரா யாருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார் என்பது சஸ்பென்ஸ் ஆக வைக்கப்பட்டுள்ளது

இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை பிரபல மலையாள இயக்குனர் ஒருவர் இயக்கவுள்ளார்.

 

Leave a Reply