shadow

பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது காதலி நயன்தாரா நடித்துவரும் நெற்றிக்கண் படத்தின் அப்டேட்டை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்

நெற்றிக்கண் படத்தில் இடம்பெற்றுள்ள ’இதுவும் கடந்து போகும்’ என்ற பாடல் விரைவில் வெளியாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்

கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையில் சித் ஸ்ரீராம் பாடிய இந்த பாடல் அனைவரையும் கவரும் என்று அவர் தெரிவித்துள்ளார்

இந்த படத்தை ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது என்பதும் நயன்தாரா இந்த படத்தில் கண் தெரியாத மாற்றுத்திறனாளி வேடத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை மிலிந்த் ராவ் என்பவர் இயக்கியுள்ளார்