நயன்தாராவின் ‘ஐரா’ படத்தின் வீடியோ பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகை நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்துள்ள ‘ஐரா’ திரைப்படம் மார்ச் 28ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகளில் தயாரிப்பு நிறுவனம் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகிறது

இந்த நிலையில் ‘ஜிந்தாகோ’ என்ற லிரிக் பாடலை கடந்த 1ஆம் தேதி வெளியிட்ட படக்குழு தற்போது மார்ச் 15ஆம் தேதி இதே பாடலின் வீடியோ புரமோ பாடலை வெளியிட திட்டமிட்டுள்ளது. கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையில் உருவாகிய இந்த பாடலில் நயன்தாராவின் அட்டகாசமான நடனம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

சர்ஜூன் இயக்கியுள்ள ‘ஐரா’ படத்தில் நயன்தாரா, கலையரசன், யோகிபாபு, ஜெயப்பிரகாஷ், லீலாவதி உள்பட பலர் நடித்துள்ளனர் இந்த படத்திற்கு சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார்.

Leave a Reply