நம்பிக்கை வாக்கெடுப்பு: கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு வெற்றி

கர்நாடகாவில் நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வியடைந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை புதிய முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்றார். இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்கியது.

தொடக்கத்தில் பேரவையில் எடியூரப்பா உரையாற்றினார். பின்னர் முன்னாள் முதல்வர்கள் குமாரசாமி, சித்தராமையா ஆகியோர் உரையாற்றிய பின்னர் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்கியது. குரல் வாக்கெடுப்பு மூலம் பதிவு செய்யப்பட்ட இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மைக்கு தேவையான எம்.எல்.ஏக்களின் ஆதரவை எடியூரப்பா பெற்றதை அடுத்து அவர் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றாதாக அறிவிக்கப்பட்டது.

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றாலும் எடியூரப்பா முழுமையான ஆட்சி காலத்தை நிறைவு செய்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply