shadow

நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் தோல்வி: ராஜபக்சே அதிர்ச்சி

இலங்கை நாடாளுமன்றத்தில் பிரதமர் ராஜபக்சேவுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் ராஜபக்சே தோல்வியடைந்ததாக சபாநாயகர் ஜெயசூர்யா அறிவித்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

முன்னதாக வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்பே ராஜபக்சே வெளிநடப்பு செய்தார். பாராளுமன்றத்தில் ஏற்பட்ட கடும் அமளியை தொடர்ந்து அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.

ராஜபக்சேவுக்கு பெரும்பான்மை இல்லாததால் வாக்கெடுப்பு நடத்த விடாமல் அவரது ஆதரவு எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். கடும் அமளிக்கு இடையே, ராஜபக்சே அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.

இதைத்தொடர்ந்து குரல் வாக்கெடுப்பில் ராஜபக்சே அரசு பெரும்பான்மை இன்றி தோல்வியடைந்ததாக சபாநாயகர் ஜெயசூர்யா அறிவித்தார். சபாநாயகர் அறிவிப்பை வெளியிட எதிர்ப்பு தெரிவித்து ராஜ பக்சே ஆதரவு எம்.பி.க்கள் கடும் கூச்சல் குழப்பம் செய்தனர். இதன் பிறகு அவையை இன்று நாள் முழுவதும் ஒத்தி வைப்பதாக சபாநாயகர் ஜெயசூர்யா அறிவித்தார்

Leave a Reply