நடுவானில் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி: தனியார் விமான நிறுவனம் அசத்தல்

பொதுவாக விமான பயணம் என்றால் பயண நேரம் முழுவதும் கிட்டத்தட்ட உட்கார்ந்தே செல்ல வேண்டிய நிலை பயணிகளுக்கு இருக்கும். ஆனால் ஆஸ்திரேலியாவை சேர்ந்த விமான நிறுவனம் ஒன்று பயணிகளுக்கு பறக்கும் விமானத்தில் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி உள்பட ஒருசில வசதிகளை கொடுத்துள்ளது

இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் இருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரம் வரை பயணம் செய்ய சுமார் 20 மணி நேரம் ஆகிறது. இந்த வழித்தடத்தில் காண்டாஸ் என்ற விமானம் இயக்கப்படுகிறது.

இந்த விமானம் 20 மணி நேரம் எங்கும் நிற்காமல் பயணம் செய்து சிட்னி நகரை அடைவதால் இந்த விமானத்தில் பிரயாணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு மனரீதியில் சோர்வு ஏற்படாமல் இருக்க நடை பயிற்சி மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்ள விமான நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

மேலும் இதற்காகவே விமானத்தின் ஒரு சிறு பகுதி ஒதுக்கப்பட்டுள்ளதால் பயணிகள் உற்சாகமாகியுள்ளனர். இந்த வசதியை மற்ற விமான நிறுவனங்களும் கடைபிடித்தால் விமான பயணிகளின் உடல்நலம் மற்றும் மனநலம் உற்சாகமாக இருக்கும் என பயணிகள் தரப்பில் இருந்து வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது

Leave a Reply