நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடுவது யார் யார்?

நடிகர் சங்க தேர்தல் நடத்துவது தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்க அவசர செயற்குழு கூட்டம் சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பொதுச்செயலாளர் விஷால், துணை தலைவர் கருணாஸ், நடிகர்கள் மோகன், ராஜேஷ், பூச்சி முருகன், நடிகை குட்டி பத்மினி உள்ளிட்ட 24 செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நாசர், தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் ஏற்கனவே போட்டியிட்டவர்கள் மீண்டும் போட்டியிடுவதாகவும், நடிகர் சங்க தேர்தலை நடத்த, தேர்தல் அதிகாரியாக ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபனை நியமிக்க செயற்குழு கூட்டத்தில் ஒப்புதல் அளித்துள்ளதாகவும், நடிகர் சங்க தேர்தலை நடத்த 3 இடங்களை பரிந்துரை செய்வோம், அதில் ஒரு இடத்தை தேர்தல் அதிகாரி முடிவு செய்வார் என்றும், தேர்தல் நடத்தும் தேதியையும் நீதிபதி பத்மநாபனே முடிவு செய்வார் என்றும் நாசர் தெரிவித்தார்.

Leave a Reply