நடிகர் மற்றும் இயக்குநர் மனோபாலா தற்போது சின்னத்திரை நடிகர் சங்க தலைவராக பொறுப்பேற்று உள்ளார். அவருக்கு சின்னத்திரை நடிகர்-நடிகைகள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்

கடந்த சில நாட்களாக சின்னத்திரை நடிகர் சங்கத்தில் பெரும் குழப்பங்கள் இருந்து வந்த நிலையில் தலைவர் பொறுப்பை ஏற்கும் நபர்கள் யார் என்பது குறித்த கேள்விக்கு பதில் தெரியாமல் சின்னத்திரை நடிகர் நடிகைகள் இருந்தனர்

இந்த நிலையில் தற்போது பெரிய திரையில் நடிகர் மற்றும் இயக்குனர் ஆக இருந்துவரும் மனோபாலா சின்னத்திரையிலும் நடித்து வருகிறார் குறிப்பாக செம்பருத்தி தொடரில் இவரது நடிப்பு பெரும் அளவில் பாராட்டப்பட்டு வருகிறது

இந்த நிலையில் தற்போது தமிழகத்தின் சின்னத்திரை நடிகர் சங்கத்தின் தலைவராக மனோபாலா அவர்கள் பொறுப்பேற்று உள்ளார் அவருக்கு சக நடிகர்-நடிகைகள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 

Leave a Reply