shadow

நடிகர்களை கட்சியில் சேர்த்து கொள்ள தயார்: அன்புமணி

நடிகர்களை ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து வந்த கட்சியாக கருதப்படும் பாமக, சமீபத்தில் நடிகர் ரஞ்சித்தை தனது கட்சியில் இணைத்து கொண்டது மட்டுமின்றி முக்கிய பொறுப்பையும் வழங்கியது.

இந்த நிலையில் நடிகர்கள் எங்கள் கட்சியில் சேர்வதற்கு எந்த தடையும் இல்லை என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை என்று கூறிவந்த பாமக, தற்போது ஒரே கருத்துள்ள கட்சிகளுடன் கூட்டணி அமைக்க தயார் என்று அறிவித்துள்ளது.

மேலும் சபரிமலை விவகாரம் குறித்து கருத்து கூறிய அன்புமணி ராமதாஸ், ‘சபரிமலையில் ஒரு ஐதீகம் கடைபிடிக்கப்படுகிறது, அதில் தலையிடக்கூடாது, பாரம்பரிய பழக்க, வழக்கத்தை மாற்றக் கூடாது’ என்று கூறியுள்ளார்.

Leave a Reply