shadow

நடத்த முடியாவிட்டால் தனியார்மயமாக்குங்கள்: அரசுக்கு நீதிபதி கண்டிப்பு

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்துள்ள நிலையில் அரசு, போக்குவரத்து தொழிலாளர்கள் இரு தரப்பினர்களையும் நீதிமன்றம் சரமாரி கேள்வி கேட்டு கண்டித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க அரசுக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம், போக்குவரத்துத்துறையை நடத்த முடியாவிட்டால் அதை கலைத்துவிட்டு தனியார்மயமாக்க வேண்டியது தானே? என்றும் கேள்வி எழுப்பியது.

பேருந்துகளை இயக்காததால் மக்கள் மருத்துவமனைக்கு கூட செல்ல முடியவில்லை என்றும் ரூ.10 லட்சம் செலுத்தி அப்போலோ செல்ல முடிந்தால் ஏன் அரசு பேருந்தை நம்பியிருக்கின்றார்கள்? என்றும் நீதிபதி வேதனை தெரிவித்தார். தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த தொகையை வழங்குவதில் ஏன் தாமதம்? என்றும் அரசுக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார். அதே நேரத்தில் தொழிலாளர்களின் முன்னறிவிப்பு இல்லாத வேலைநிறுத்தத்தால் யாருக்கு அதிகம் துன்பம் என்பதை உணர்ந்தீர்களா? என்று தொழிற்சங்கங்களுக்கும் நீதிபதி கேள்வி எழுப்பினார்

Leave a Reply