shadow

தொழில் தொடங்க ஏற்ற நாடுகள் பட்டியல்: இந்தியாவுக்கு 77-வது இடம்

தொழில் தொடங்குவதற்கு எளிதான சூழல் உள்ள நாடுகளின் பட்டியல் ஆண்டுதோறும் வெளியாகி வருகிறது. உலக வங்கி வெளியிட்டு வரும் இந்த பட்டியலில் இந்த ஆண்டுக்கான பட்டியல் தற்போது வெளிவந்துள்ளது.

இந்த ஆண்டுக்கான பட்டியலில், இந்தியா 23 இடங்கள் முன்னேறி 77-வது இடத்தை பெற்றுளது. இந்த முன்னேற்றம் உலக நாடுகள் மத்தியில் அபரிமிதமான வளர்ச்சியாக பார்க்கப்படுகிறது.

இதன் மூலம், கடந்த 2014-ம் ஆண்டில் தெற்காசிய நாடுகள் அளவில் தொழில் தொடங்குவதற்கு ஏற்ற நாடுகள் பட்டியலில் ஆறாவது இடத்தில் இருந்த இந்தியா தற்போது முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

அதன்படி, மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 2014-ல் ஆட்சிக்கு வந்த போது, உலக வங்கி வெளியிட்ட தொழில் தொடங்க ஏற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா 142-வது இடத்தில் இருந்தது.

2016-ம் ஆண்டில் 130 வது இடத்தை, 2017-ம் ஆண்டில் 100-வது இடத்திலும் இந்தியா இடம் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply