தேர்தல் வன்முறை: ஒருவர் பலியால் ஆந்திராவில் பரபரப்பு

ஆந்திராவில் சட்டமன்றம் மற்றும் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு ஒருங்கே நடைபெற்று வரும் நிலையில் அனந்தபூர் மாவட்டத்தில் வாக்குப்பதிவு நடைப்பெற்ற போது தெலுங்குதேசம்- ஒய்எஸ்ஆர் கட்சி தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டு தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த ஒருவர் பரிதபமாக உயிரிழந்தார்.

ஆந்திராவின் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள தாடிபத்ரி என்ற பகுதியில் இன்று காலை முதல் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். இந்த நிலையில் திடீரென தெலுங்குதேசம்- ஒய்எஸ்ஆர் கட்சி தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டது. அந்த மோதலில் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த நிர்வாகி ஒருவருக்கு படுகாயம் ஏற்பட்டு உயிருக்காக போராடி சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.

வாக்குசாவடி முன்பு வாக்கு சேகரித்தால் இந்த மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த மோதலில் கட்சி நிர்வாகி ஒருவர் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பலத்த பாதுகாப்புடன் போலீசார் அந்த பகுதியில் குவிந்துள்ளனர்.

Leave a Reply