shadow

தேமுதிக பொதுக்குழு. வழக்கம் போல் கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிடாத விஜயகாந்த்
dmdk
தேமுதிக கட்சியின் பொதுக்குழு இன்று பெருமபலூரில் கூடியது. இந்த கூட்டத்துக்கு கட்சியின் தலைவர் விஜயகாந்த் தலைமையேற்றார்.  தமிழக சட்டப்பேரவை தேர்தல், கூட்டணி, தொகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் போன்றவை குறித்து இந்தக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று கூறப்பட்டாலும் அனைவரும் எதிர்பார்த்தது போன்றே அதுமாதிரியான அறிவிப்புகள் ஏதும் வெளியாகவில்லை. எந்த கட்சியுடன் கூட்டணி என்று கடைசி நேரம் வரை தனது கட்சியினர்களையும், மற்ற கட்சியினர்களையும் வழக்கமாக குழப்பும் விஜயகாந்த், இம்முறையும் கடைசி நேரத்தில் தான் கூட்டணி குறித்து முடிவெடுப்பார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இவற்றில் ஒருசில தீர்மானங்களை பார்ப்போம்.

 * சட்டமன்ற தேர்தலில் தேமுதிக எத்தகைய முடிவெடுக்க வேண்டும் என்பது குறித்த முழு அதிகாரத்தையும் தேமுதிக நிறுவனத் தலைவரும், கழக பொதுச் செயலாளருமான விஜயகாந்துக்கு பொதுக்குழு ஏகமனதாக வழங்குகிறது.

* மத்திய அரசும், இந்திய தேர்தல் ஆணையமும் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை அறிவிக்கும் போதே, தமிழக அதிமுக அரசை கலைத்துவிட்டு, கவர்னர் ஆட்சியை ஏற்படுத்திய பிறகு, தமிழக சட்டமன்ற தேர்தலை எந்தவித முறைகேடுகளும் இல்லாமல் நடத்திட வேண்டும்.

* எவ்வித முன்னேற்பாடும் இல்லாமல் செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து விட்டு பேரழிவை ஏற்படுத்திய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை பொதுக்குழு வன்மையாக கண்டிக்கிறது.

* தமிழகத்தில் லஞ்சம், ஊழலை ஒழித்திட லோக் ஆயுக்தா அமைப்பை நிறுவிடவேண்டும்.

* கரும்பு உற்பத்திக்கு கூடுதல் செலவாகும் நிலையில் டன் ஒன்றுக்கு 3,500 ரூபாய் வழங்கவேண்டும் என்றும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அதிகரித்து, ஒரு குவிண்டாலுக்கு ரூபாய் 1,400 மற்றும் 1,470 என வழங்குவதை, மேலும் உயர்த்தி வழங்கவேண்டும்.

* மீனவர் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வுகாண வேண்டுமென மத்திய, மாநில அரசுகளை வற்புறுத்தி கேட்டுக்கொள்கிறது.

* தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த அனுமதியளித்த மத்திய அரசுக்கும், பிரதமர் நரேந்திரமோடி, மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், பொன்.இராதகிருஷ்ணன் ஆகியோருக்கும் நன்றி.

* தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த தேவையான நடவடிக்கையை எடுக்கவேண்டும்.

* அனைத்து பொருட்களுக்கும் தனிகாப்பீட்டு (INSURANCE) திட்டம் இருக்கும்போது, விவசாய பயிர்களுக்கு மட்டும் பொதுவான காப்பீட்டு திட்டம் என்பதை மாற்றியமைத்து, தனிநபர் விவசாய காப்பீட்டு திட்டத்தை கொண்டுவரவேண்டும்.

* வெள்ளம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் வாட் வரியை ரத்து செய்யவேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு, பாதிப்பிற்கேற்ற நிவாரணமும், புதிய வட்டியில்லா கடனுதவியும், பழைய கடனுக்கு கால அவகாசமும் வழங்கவேண்டும்.

போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Leave a Reply