shadow

தேங்காயில் தீபம் ஏற்றலாமா?

தீபம் ஏற்ற தேங்காய் எதற்கு? தூய்மை மற்றும் பொருளாதார நோக்கில்… மண்ணால் ஆன அகல் விளக்குகளே சிறந்தவை. எவரோ ஒருவர், தற்செயலாக தேங்காயை உடைத்து தீபம் ஏற்ற… மற்றவர்களும் அதைப் பின்பற்றத் தொடங்கிவிட்டனர்!

அது மட்டுமா? எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றும் சம்பிரதாயமும் இப்போது வலுத்துவிட்டது. ‘இந்த தெய்வத்துக்கு எலுமிச்சம்பழ விளக்கு விசேஷம். இந்தக் கடவுளுக்குத் தேங்காய் தீபம் சிறப்பு’ என்னும் பிரசாரமும் கிளம்பிவிட்டது!

இலக்கணம் மற்றும் நடைமுறைகள் எல்லாம் விளக்கேற்றும் விஷயத்திலும் உண்டு. எதில் வேண்டுமானாலும் விளக்கேற்றலாம் என்பதை தர்மசாஸ்திரம் அனுமதிக்கவில்லை.

சில கிராமங்களில், இறந்தவரது இல்லத்தில் தேங்காய் விளக்கைப் பயன்படுத்துவர். அம்மனை நெய் தீபமேற்றி வழிபட, தேங்காய் விளக்கைப் பயன்படுத்துபவர்களும் உண்டு. இவையெல்லாம் நம்பிக்கையில் விளைந்தவை. நம் பண்பாட்டில் விளைந்த விளக்குகளைப் பயன்படுத்துவதே அழகு. இடையே வந்த புதிய தகவல்கள் மற்றும் முறைகளை தாராளமாகப் புறக்கணிக்கலாம்.

Leave a Reply