தெலுங்கு ‘தெறி’ ரீமேக்கில் சமந்தா, எமிஜாக்சன் கேரக்டரில் நடிப்பது யார்?

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் தாணு தயாரிப்பில் கடந்த 2016ஆம் ஆண்டு வெளிவந்த ‘தெறி’ திரைப்படம் தற்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இந்த படத்தை சந்தோஷ் ஸ்ரீனிவாஸ் என்பவர் இயக்கவுள்ளார்.

இந்த படத்தில் விஜய்யின் விஜயகுமார் கேரக்டரில் பிரபல் தெலுங்கு நடிகர் ரவிதேஜா நடிக்கவுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே இந்த நிலையில் இந்த படத்தில் சமந்தாவின் கேரக்டரில் நடிக்க கேதரின் தெரசாவும், எமிஜாக்சன் கேரக்டரில் ரகுல் ப்ரித்திசிங்கும் நடிக்கவுள்ளதாகவும் இதுகுறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

ஏப்ரல் முதல் வாரத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருப்பதாகவும், வரும் தசரா விடுமுறையில் இந்த படம் ரிலீஸ் ஆகும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply