shadow

தெலுங்கு ‘ஜானு’ கேரக்டரில் நடிக்க பலத்த போட்டி

சமீபத்தில் வெளியான ’96’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இந்த படம் 11 நாட்களில் ரூ.40 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கை கைப்பற்றியுள்ள நடிகர் நானி, ராம் வேடத்தில் அவரே நடிக்கவுள்ளார். படத்தின் உயிர் நாடியான ஜானு கேரக்டரில் நடிக்க தெலுங்கு நடிகைகள் இடையே பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது

இப்போதைக்கு இந்த கேரக்டரில் நடிக்க சமந்தாவுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெலுங்கு திரையுலகம் கூறுகின்றது. ஆனால் அவர் ஓய்வில் இருப்பதால் அவர் நடிக்காத பட்சத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது

ஏற்கனவே ‘விண்ணை தாண்டி வருவாயோ’ படத்தில் த்ரிஷா நடித்த ஜெஸ்ஸி கேரக்டரில் சமந்தா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply