shadow

தெலுங்கு சினிமாவில் கால் பதித்த பிரபல நடிகை !

போடா போடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான வரலட்சுமி சரத்குமார் தற்போது தமிழ் , கன்னடம்,மலையாளம் போன்ற பல படங்களில் கதாநாயகியாக மட்டுமல்லாமல் வில்லியாகவும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் முதல் முதலாக தெலுங்கு சினிமாவில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இதுவரை தமிழ் , மலையாளம் போன்ற மொழிகளில் நடித்து வந்த வரலட்சுமி சரத்குமார் தற்போது தெலுங்கு சினிமாவிலும் கால்பதித்து விட்டார்.

வரலட்சுமி சரத்குமார் நடிக்கவிருக்கும் இந்த தெலுங்கு படத்தை நாகேஷ்வர் ரெட்டி இயக்க உள்ளார். சந்தீப் கிஷன் ஹீரோவாகவும் ஹன்சிகா ஹீரோயினாகவும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

Leave a Reply