தெலுங்கில் படுதோல்வி அடைந்த விஸ்வாசம்

அஜித்தின் விஸ்வாசம் திரைப்படம் மிக சுமாராக இருப்பதாகவே பல ஊடகங்களில் விமர்சனங்கள் வந்தாலும், ‘பேட்ட’ படத்துடன் ஒப்பிட்டே அந்த படத்தை ரசிகர்கள் ஹிட்டாக்கிவிட்டார்கள். உண்மையில் விஸ்வாசம் திரைப்படம் தனியாக வெளிவந்திருந்தால் படுதோல்வி அடைந்திருக்கும் என்பதே உண்மை

இந்த நிலையில் இப்படத்தின் தெலுங்கு டப்பிங் மார்ச் 1ந் தேதி வெளியானது. இந்த படத்திற்கு தெலுங்கில் எதிர்பார்த்த வரவேற்பு இல்லாததால் படம் தோல்வியை சந்திக்கும் என்று விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளார்கள்.

விஸ்வாசம் வெளியான 2 நாட்களின் மொத்த வசூலே 1 கோடிக்கும் குறைவு தான் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை அஜித் நடித்த படங்களின் தெலுங்கு டப்பிங் பெரிய அளவுக்கு வரவேற்பு பெறவில்லை. அந்த சோகம் தொடர்கிறது.

 

 

Leave a Reply