shadow

தெலுங்கில் டப் செய்யப்படும் விக்ரம்-சமந்தாவின் ’10 எண்றதுக்குள்ள’

சீயான் விக்ரம், சமந்தா, பசுபதி நடிப்பில் விஜய்மில்டன் இயக்கத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்த ’10 எண்றதுக்குள்ள’ திரைப்படம் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வெற்றி பெற்றது. இந்த படத்தில் சமந்தா இரண்டு வித்தியாசமான கேரக்டரில் நடித்திருந்தர

இந்த நிலையில் இந்த படம் தற்போது தெலுங்கில் டப் செய்யப்பட்டு வருகிறது. இந்த படத்திற்கு ’10’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் வெகுவிரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

முன்னணி தமிழ் நடிகர்கள் பலரும் தெலுங்கு மார்க்கெட்டை பிடித்துவிட்ட நிலையில் தற்போது இந்த படம் வெற்றி பெற்றால் விக்ரமுக்கும் தெலுங்கு மார்க்கெட் கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply