shadow

தென்னாப்பிரிக்க மண்ணில் முதல் வெற்றி: டிராவிட் நம்பிக்கை

இந்திய கிரிக்கெட் அணி இதுவரை பலமுறை தென்னாப்பிரிக்கா நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்த போதிலும் இதுவரை ஒருமுறை கூட எந்தவொரு தொடரையும் வெல்லவில்லை என்பது ஒரு சோகமான சாதனையாக இருந்து வருகிறது

இந்த நிலையில் இந்திய அணி வரும் 24ஆம் தேதி தென்னாப்பிரிகா அணியுடன் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது. மூன்று டெஸ்ட் போட்டி, ஆறு ஒருநாள் போட்டி, மூன்று டி-20 போட்டி ஆகியவற்றில் விளையாடவுள்ள இந்திய அணி இம்முறை முதல்முறையாக தொடரை கைப்பற்றி வெற்றியுடன் இந்தியாவுக்கு திரும்பும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘மிகவும் வலுவாக திகழும் தற்போதைய இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்ற வாய்ப்புள்ளது. நாம் சிறந்த வேகப்பந்து வீச்சை கொண்டுள்ளோம். நமக்குத் தேவைப்பட்டால் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியாவை வைத்துள்ளோம். அதேபோல் திறமையான அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகிய இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர்.

நான் ஏன் அதிக மகிழ்ச்சியடைகிறேன் என்றால், நம்முடைய பேட்ஸ்மேனக்ள ஏற்கனவே தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்தவர்கள். அவர்கள் 40 முதல் 50 டெஸ்டுகள் விளையாடியுள்ளனர். அங்குள்ள சூழ்நிலையில் சற்று அதிர்ஷ்டத்துடன், ஆடுகளத்தில் சற்று புற்கள் குறைவாக இருக்க வேண்டியது தேவை. இப்படி இருந்தால் நமக்கு அதிக அளவில் வாய்ப்புள்ளது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்’’ என்றார்

Leave a Reply