shadow

தூங்கும் முறை உங்களது உடலில் ஏற்படுத்தும் பாதிப்பு
தூக்கத்தில் இப்படி படுப்பது தான் நல்லது என்ற முக்கியத்துவம் உங்களுக்குத் தெரியுமா? தூங்கும் நிலை உங்கள் உடல் நலனில் பாதிப்பினை ஏற்படுத்துகின்றது என்பது உங்களுக்குத் தெரியுமா? அறிந்து கொள்வோம்.

1. உங்கள் முதுகின் மீது இருபுறமும் கைகள் நீட்டி இருக்க

முதுகின் மீது இருபுறமும் கைகள் நீட்டி இருக்க தூங்கும் நிலை மிக சிறந்த நிலையாக மருத்துவ உலகம் கூறுகின்றது. தலைக்கு மென்மையான மெல்லிய தலையணை இருக்கலாம். இந்நிலை உங்கள் கழுத்து, தண்டுவடம் இவற்றினை நன்கு பாதுகாக்கும்.

2. முதுகின் மீது கைகள் மேல்புறம் மடித்து

இந்நிலை முதுகிற்கு மிகவும் நல்லது. ஆனால் முதுகின் மீது படுக்கும் பொழுது அசிடிடி பிரச்சினை, கொரட்டை பிரச்சினை ஏற்பட வாய்ப்புண்டு. கைகள் மேல் நீட்டி இருப்பது நரம்புகளை அழுத்தி வலி ஏற்படுத்தலாம்.

3. வயிற்றின் மீது படுப்பது

வயிற்றின் மீது படுப்பது செரிமானத்தினை கூட்டும். ஆனால் முகத்தினை பக்க வாட்டில் வைத்து படுத்தாலே நன்கு மூச்சு விட முடியும். இது முக்கியம்.
தொடர்ந்து இப்படியே படுத்தால் முதுகுவலி ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

4. குழந்தை போல் படுப்பது

குழந்தை போல் முட்டியை மடக்கி படுப்பது ஒருவருக்கு மிகவும் சவுகர்யமாக இருக்குமாம். ஆனால் கழுத்திற்கும், முதுகிற்கும் இது நல்லதல்ல. இது ஆழ் மூச்சினை குறைத்துவிடும். கர்ப்பிணிகள், குறட்டை பிரச்சினை உடையோர் இந்நிலையில் சிறிது நேரம் படுப்பது நல்லது.

5. பக்க வாட்டில் கை கால்களை நீட்டிபடுப்பது

கைகளை, கால்களை நீட்டி பக்க வாட்டில் படுப்பது தண்டு வடத்தினை இயற்கையான நிலையில் வைப்பதால் தண்டு வடத்திற்கு நல்லது. ஆனால் வெகு நேரம் இப்படி படுப்பது உடலிலும், முகத்திலும் தொய்வும் சுருக்கங்களும் ஏற்பட வாய்ப்பு உண்டாக்கி விடும்.

6. பக்க வாட்டில் கைகளை நீட்டி

மேற்கூறிய பலன்களையே இந்நிலையும் அளிக்கும். ஆனால் இந்நிலையில் கைகளுக்கு அழுத்தத்தின் காரணமாக குறைவான ரத்தப் போக்கு ஏற்படும். நரம்புகளில் அழுத்தம் ஏற்படும்.

7. வலது புறம் திரும்பி படுப்பது

பக்க வாட்டில் வலது புறம் திரும்பி படுப்பது நெஞ்செரிச்சலினை கூட்டும். இடது பக்கமும் வெகு நேரம் படுக்கக் கூடாது. கர்ப்பிணிப் பெண்களை மருத்துவர்கள் சிறிது நேரம் இடது பக்கம் திரும்பி படுக்கச் சொல்வார்கள். இது குழந்தை க்கு ரத்த ஓட்டம் நன்கு செல்ல உதவும்.

8. தலை யணை உதவியுடன்

பக்கவாட்டில் காலை மடித்து தலையணை மீது வைத்து உறங்குவது நல்ல ஓய்வு அளிக்கும். இருபுறமும் இவ்வாறு செய்யலாம். இது போல் முட்டிக்கு கீழ் தலையணை வைத்தும் படுக்கலாம்.

 

Leave a Reply