shadow

துரைமுருகன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி: திமுகவினர் அதிர்ச்சி

திமுக தலைவர் கருணாநிதி கடந்த சில மாதங்களாகவே உடல்நலம் இன்றி இருக்கும் நிலையில் சற்று முன்னர் திமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மூச்சு திணறல் காரணமாக துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவரது உடல்நிலை குறித்து இன்னும் ஒருசில நிமிடங்களில் அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த தகவலால் திமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply