shadow

துணை முதல்வர் ஓபிஎஸ் தம்பிக்கு புதிய பதவி

துணை முதல்வர் ஓபிஎஸ் அவர்களின் சகோதரர் ஓ.ராஜா சமீபத்தில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு பின் ஐந்தே நாட்களில் மீண்டும் கட்சியில் சேர்த்து கொள்ளப்பட்டார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் ஓ.ராஜா அவர்கள் மதுரை ஆவின் சேர்மனாக நியமனம் செய்யப்பட்டுள்ளது.

இன்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா மதுரை ஆவின் சேர்மனாக பதவியேற்றார். மதுரை மாவட்ட ஆவின் தலைவராக வெற்றிபெற்ற ஓ.ராஜா அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு பின்பு சேர்க்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் ஆவின் சேர்மனாக பதவியேற்றுள்ளார்.

இருப்பினும் மதுரை ஆவின் அலுவலகத்தில் ஓ.ராஜா பதவியேற்பு நிகழ்ச்சியில் அதிமுகவினர் பங்கேற்கவிலை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply