தீவிரவாதிகள் லிஸ்ட்டில் பிகில் பட நடிகை: பெரும் பரபரப்பு

விஜய் நடித்த பிகில் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வந்த நடிகை ரெபா மோனிகா அடுத்ததாக விஷ்ணு விஷால் நடிக்கும் படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்

எப்.ஐ.ஆர் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் விஷ்ணு விஷால் தீவிரவாதியாகவும் அவருக்கு உதவியாக பெண் தீவிரவாதியாக ரெபா மோனிகா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது

இந்த படத்தில் மஞ்சிமா மோகன் மற்றும் ரைசா வில்சன் மேலும் இரண்டு முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

மனுஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கும் என்றும், வரும் ஏப்ரல் மாதம் இந்த படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது

விஷ்ணு விஷாலுக்கு இந்த ஆண்டு எந்த படமும் வெளிவரவில்லை என்பதும் கடந்த ஆண்டு அவரது நடிப்பில் வெளியான ‘சிலுக்குவார்ப்பட்டி சிங்கம்’ ராட்சசன்’ ஆகிய இரண்டு படங்களும் நல்ல வெற்றியை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply