தீபாவளிக்கு மறுநாள் திங்களன்று விடுமுறையா? பள்ளிக்கல்வித்துறை

இந்த ஆண்டு அக்டோபர் 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை வருவதால் தீபாவளிக்கு மறுநாள் திங்கட்கிழமை விடுமுறை அளிக்க வேண்டும் என பள்ளிகல்வித்துறைக்கு ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

தீபாவளிக்கு முந்தைய நாள் சனிக்கிழமை வழக்கமான முறை என்பதால் வெள்ளிக்கிழமை இரவு வெளியூர் செல்லும் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஊழியர்கள் தீபாவளி அன்று இரவே கிளம்பினால் தான் மறுநாள் திங்கட்கிழமை வேலைக்கு வர முடியும்,

இந்த நிலையில் தீபாவளி அன்று இரவு கிளம்புவதை தவிர்க்க மறுநாள் திங்கட்கிழமை விடுமுறை அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்

ஆனால் தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை விடப்படுவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

Leave a Reply