shadow

திருவாரூரில் தேர்தலை நடத்த முடியுமா? முடியாதா? தேர்தல் ஆணையம் அதிரடி கேள்வி

election commissionதிருவாரூரில் தேர்தலை நடத்த முடியுமா? முடியாதா? என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கையை தாக்கல் செய்யமாறு மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

திருவாரூரில் வரும் 28ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் தற்போது வேட்புமனுக்களும் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை நிறுத்துவது குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் ஆணையர்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசியச் செயலாளர் டி.ராஜா சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக தலைமை தேர்தல் அதிகாரியை கலந்து பின்னர் முடிவு செய்வதாக தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் ஆணையர்கள் தெரிவித்ததாக கூறினார்

இந்த நிலையில் திருவாரூரில் தேர்தல் நடத்துவதற்கான சூழ்நிலை எப்படி உள்ளது? என்பது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி விளக்கம் அளிக்க வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ உத்தரவிட்டு உள்ளார்.

 

Leave a Reply