shadow

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் நியமனம்

திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி கடந்த சில நாட்களாக காலியாக இருந்ததால் அந்த பதவிக்கு தகுந்த நபரை நியமனம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வந்தது.

இந்த நிலையில் திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தராக தாமரைச்செல்வி என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்ட தாமரைசெல்வி நேற்று பணி நியமனத்துக்காக கடிதத்தை ஆளுநரிடம் இருந்து பெற்றுக்கொண்டார்

உயர்கல்வித்துறையில் 35 ஆண்டுகள் அனுபவம் நிறைந்த தாமரைச்செல்வி, பல சர்வதேச கருத்தரங்குகளில் பங்கேற்று 133 ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

 

Leave a Reply