shadow

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வழக்கு: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு


கடந்த ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது திருப்பரங்குன்றம் தொகுதிக்கு நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார். அவரது வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி திமுக சார்பில் போட்டியிட்ட டாக்டர் சரவணன் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், ‘‘ஜெயலலிதா சுயநினைவின்றி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டபோது அதிமுக வேட்பாளருக்கு இரட்டைஇலை சின்னம் ஒதுக்கக்கோரி இடதுகை பெருவிரல் ரேகையை தேர்தல் ஆவண படிவத்தில் வைத்துள்ளார். அவர் சுயநினைவோடு தான் இதில் கைரேகை வைத்தாரா? என்பது சந்தேகமாக உள்ளது. எனவே மருத்துவ ஆவணங்களை சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும்’’ என அதில் கோரியிருந்தார்

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இதுகுறித்து தேர்தல் ஆணைய முதன்மை செயலாளர் நேரில் வரும் அக்டோபர் 6ஆம் தேதிக்குள் ஆஜராக வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply