shadow

திருச்சியில் போட்டியிடுகிறாரா வைகோ?

திமுக கூட்டணியில் மதிமுக இருப்பதாக வைகோ கூறிக்கொண்டிருந்தாலும், இதுவரை மதிமுக தங்கள் கூட்டணியில் இருப்பதாக திமுக அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. ஒருவேளை மதிமுகவுக்கு கூட்டணியில் இடம் கிடைத்தாலும் ஒன்று அல்லது இரண்டு தொகுதிகள் மட்டுமே கிடைக்கும் என தெரிகிறது

அந்த வகையில் திருச்சி தொகுதியில் வைகோ போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே இருக்கும் நிலையில், வைகோ திருச்சிக்கு அடிக்கடி சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருவதால் அவர் திருச்சியில் போட்டியிடுவார் என கூறப்படுகிறது

ஒருவேளை திமுக கூட்டணியில் மதிமுக இடம்பெறவில்லை என்றாலும் திருச்சி தொகுதியில் அவர் தனித்து போட்டியிடுவார் என அக்கட்சியின் வட்டாரங்கள் கூறுகின்றன

Leave a Reply