shadow

தியானம் தரும் குளியல் தொட்டிகள்

1குளிப்பதற்கு என்று ஒரு தனி அறை சமீப காலங்களில்தான் பரவலாகி இருக்கிறது. மூன்று நான்கு தலைமுறைக்கு முன்பு பெரும்பாலானவர்கள் குளிப்பதற்கு ஆறு, கண்மாய், ஓடை எனப் பொது இடங்களையே பயன்படுத்தி வந்தனர். மேலை நாடுகளில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வீட்டுக்குள் தொட்டி கட்டி குளிக்கும் வழக்கம் இருந்ததாகச் சொல்லப்பட்டாலும் அது செல்வந்தர்களுக்கு மட்டுமே சாத்தியமாக இருந்திருக்கும். இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் 18-ம் நூற்றாண்டுகளில் பரவலாக குளியல் தொட்டி பயன்பாட்டில் இருந்துள்ளதாகச் சொல்லப்படுகின்றன. அவை பெரும்பாலும் கால்கள் கொண்ட பழைய குளியல் தொட்டிகள்தாம்.

ஆனால் இன்றைக்கு நடுத்தர வர்க்கத்தினர் பரவலாக குளியல் தொட்டி அமைப்பதை விரும்புகின்றனர். தினமும் காக்கா குளியல் குளித்துவிட்டு வேலைக்குப் பறந்துகொண்டிருக்கும் வேளையில் இதுபோன்ற குளியல் தொட்டிகள் அவசியம்தான். குளியல் என்பது உடலை மட்டும் சுத்தப்படுத்தும் காரியம் அல்ல; மனத்தை ஆசுவாசப்படுத்தவும் கூடியது. சற்றி நேரம் குளியல் தொட்டியில் குளிக்கும்போது மனதும் புத்துணர்ச்சி ஆகிறது. அதனால் குளியலை ஒரு வகையான தியானம் என்றும்கூடச் சொல்லலாம்.

இன்றைக்கு குளியல் தொட்டிகளில் பல வகை உள்ளன. இடம், விருப்பம் ஆகிய அடிப்படையில் ஒன்றைத் தேர்வுசெய்து கொள்ளலாம். குளியல் தொட்டிகளின் முக்கிய வகைகள்.

மூலை குளியல் தொட்டி

குளியல் அறையின் மூலையில் இரு பக்கம் சுவர் இருக்கும் வகையில் அமைக்கப்படும் குளியல் தொட்டி இது.

நவீன குளியல் தொட்டி

இந்த வகை குளியல் தொட்டி கொஞ்சம் விலை மதிப்பானது. அதுபோல் விசாலமான குளியல் அறையில்தான் இந்தக் குளியல் தொட்டியை அமைக்க முடியும். குளியல் அறையின் ஓரமாக அல்லாமல் மையத்தில் அமைக்கப்படும்.

ஆனால் இன்றைக்கு நடுத்தர வர்க்கத்தினர் பரவலாக குளியல் தொட்டி அமைப்பதை விரும்புகின்றனர். தினமும் காக்கா குளியல் குளித்துவிட்டு வேலைக்குப் பறந்துகொண்டிருக்கும் வேளையில் இதுபோன்ற குளியல் தொட்டிகள் அவசியம்தான். குளியல் என்பது உடலை மட்டும் சுத்தப்படுத்தும் காரியம் அல்ல; மனத்தை ஆசுவாசப்படுத்தவும் கூடியது. சற்றி நேரம் குளியல் தொட்டியில் குளிக்கும்போது மனதும் புத்துணர்ச்சி ஆகிறது. அதனால் குளியலை ஒரு வகையான தியானம் என்றும்கூடச் சொல்லலாம்.

கால்களுடைய குளியல் தொட்டி

இது மரபான குளியல் தொட்டி வடிவம். கால்கள் கொண்டதால் குளியல் அறை கொஞ்சம் பெரியதாக இருந்தால்தான் வைக்க முடியும். ஆனால் மற்ற குளியல் தொட்டிகளைக் காட்டிலும் விலை குறைவு.

Leave a Reply