shadow

திமுக, பாஜகவுடன் கூட்டணி கிடையாது: டிடிவி தினகரன் திட்டவட்டம்

எந்த தேர்தலிலும் திமுக மற்றும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியபோது, ‘எங்களால் இரண்டு கட்சிகளுடன் கூட்டணி சேர முடியாது. ஒன்று திமுக. எம்ஜிஆர் அவர்கள் அந்த கட்சியை எதிர்த்துதான் அதிமுகவை ஆரம்பித்தார். அதேவழியை அம்மாவும் அதன்பின்னர் நாங்களும் பின்பற்றி வருகிறோம்.

அதேபோல் இன்னொரு கட்சி பாஜக. பாஜக கட்சி மீதோ, அந்த கட்சியின் தலைவர்கள் மீதோ எனக்கு எந்த தனிப்பட்ட விரோதமும் கிடையாது. அந்த கட்சியின் கொள்கைகள் எங்களுக்கு ஒத்துவராது என்று தினகரன் கூறினார்

Leave a Reply