shadow

திமுக தலைவர் பதவியை அழகிரிக்கு கொடுத்தால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தயார்: வேலுமணி

திமுக தலைவர் பதவியை அழகிரிக்கு ஸ்டாலின் விட்டுக்கொடுத்தால், தான் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தயார் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சவால் விடுத்துள்ளார்

டெல்லியில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘உலக பணக்காரர்கள் பட்டியலில் மு.க.ஸ்டாலின் குடும்பத்தினரின் பெயர் உள்ளது. ஆர்.எஸ்.பாரதி மீதும் ஊழல் குற்றச்சாட்டு இருந்தது. அதற்கு பொறுப்பேற்று தான் வகிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பையும், திமுக தலைவர் பதவியையும் அழகிரிக்கோ, துரைமுருகனுக்கோ ஸ்டாலின் கொடுக்கட்டும். அப்படிச் செய்தால் நான் நாளைக்கே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன். என் மீதான குற்றச்சாட்டு நிரூபணமானால் கட்சிப் பதவியையும் துறந்துவிட்டு அரசியலை விட்டு விலகி விடுகிறேன்.

மேலும் திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் மட்டும் ஸ்டாலினுக்கு ஏராளமான பினாமி சொத்துகள் உள்ளன. திமுக என்ன செய்தாலும் அதிமுக ஆட்சி தொடரும். கட்சி, ஆட்சி இரண்டையும் முடக்க முடியாது. ஒவ்வொரு துறையிலும் திமுகவை விட 100 மடங்கு அதிகமாகச் செய்துள்ளோம். மத்தியில் கூட்டணியில் இருந்தபோது கூட திமுக இலங்கை, காவிரி, முல்லைப் பெரியாறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணவில்லை” என அமைச்சர் வேலுமணி கூறினார்.

Leave a Reply