shadow

திமுக தலைவர் கருணாநிதியுடன் ராம்தாஸ் சந்திப்பு! கூட்டணிக்கு அச்சாரமா?

திமுக தலைவர் கருணாநிதியை நேற்று பாமகதலைவர் டாக்டர் ராமதாஸ் நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். இந்த சந்திப்பின்போது மு.க.ஸ்டாலின், துரைமுருகன், ஜி.கே.மணி உள்ளிட்டோர் இருந்தனர்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட பாமக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. ஆனால் தற்போது ஜெயலலிதா, கருணாநிதி இருவரும் அரசியல் களத்தில் இல்லாத நிலையில் தனித்து போட்டியிட வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் திமுகவுடன் கூட்டணி வைக்கவே பாமகவின் பெரும்பாலான தலைவர்கள் விரும்புவதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் நேற்று உடல்நலம் விசாரித்த ராமதாஸ், மு.க.ஸ்டாலினிடம் தற்போதைய அரசியல் குறித்தும் ஆலோசித்ததாக தெரிகிறது. ஏற்கனவே வைகோ, திமுக கூட்டணியை நெருங்கி வரும் நிலையில் பாமகவும் கூட்டணி சேர்ந்தால் வலுவான கூட்டணியாக அமைய வாய்ப்பு உள்ளது.


Leave a Reply