shadow

திமுக கூட்டணியில் மார்க்கிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள்

சென்னை அண்ணா அறிவாலயத்தில், மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு தொடர்பாக இன்று மாலை திமுக- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடையே பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது

முன்னதாக இன்று காலை திமுகவுடன் மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து பேச்சுவார்த்தை நடத்தியது. முதல்கட்ட பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாகவும் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை மீண்டும் தொடரும் என்றும் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

எனவே திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய இரு கட்சிகளும் இணைவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

Leave a Reply